அதிமுகவை யார் டெல்லியிலிருந்து மீட்கிறார்களோ அவருக்கே தலைமை - கி.வீரமணி

 
kv

அதிமுக என்கிற மிகப்பெரிய இயக்கத்திற்கு கண்முன்னால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

திராவிட கழகத்தினர் சார்பில் மதுரை தெப்ப குளத்தில் உள்ள மண்டபத்தில் திராவிட கழகம்  செயல் தலைவர் அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார்.

 இந்த கூட்டத்திற்கு பின்னர் வீரமணி செய்தியாளர்களிடம் பேசும்போது,   2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றினை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்றார்.

uoo

அவர் மேலும்,  அதிமுகவினர் திராவிடர் கழகம் தான் தாய் கழகம் என்பதை மறந்து விட்டார்கள்.   அதிமுகவில் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்து விட்டார்கள். தற்போது டெல்லியின் அடமான அதிமுகவாக உள்ளது. லேடியா? மோடியா? என்று கேட்ட அம்மாவின் கொள்கைக்கு எதிராக திசைமாறி செல்கின்றார்கள்.   அதிமுகவை யார் டெல்லியிலிருந்து மீட்கிறார்களோ அவர்கள்  தலைமைக்கு வரட்டும்.   அதிமுகவின் பொதுக்குழுவில் புதுகுழு தான் உருவாகிறது.   அதில் தங்களது அவமானத்தை வீட்டு கடன் கிடைக்க வேண்டுமென்று முன்னதாகவே கண் முன்னால் இதுபோன்ற நிலை ஏற்படும் வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய  விடாமல் பாஜக பிரித்தாளுகிறது.  தமிழகத்தில் எதிக் கட்சியை வைத்து பொம்மலாட்டம் போராட்டம் நடத்துகிறது .யார் வரவேண்டும் என்பதையும் யார் வரக் கூடாது என்பதையும் திட்டமிட்டு காய் நகர்த்துகிறது ஆகிவிடுகிறார்.