5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்! திமுக - பாஜக மோதலில் கதறும் விஜய்
அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. நேற்று துணிவு படத்தில் இடம்பெற்ற வசனம் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி இருந்தது. அதை திமுகவினர் டிரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று வாரிசு படத்தில் இடம்பெற்ற வசனம் டிரெண்டாகி வருகிறது. இதை பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்குமான மோதல் வலுத்து வருகிறது. தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியானது என்று ஆளுநர் ரவி சொன்னதிலிருந்து திமுக அதை பிடித்துக் கொண்டது. இதை அடுத்து சட்டமன்றத்தில் நடந்த உரையிலும் ஆளுநர், தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார். இது பெரும் சர்ச்சை ஆனது. இதனால் கெட் அவுட் ரவி என்று திமுகவினர் டிவிட்டரில் இரண்டு செய்து வருகின்றனர். போஸ்டர் அடித்தும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக ஆளுநர் தனது பொங்கல் வாழ்த்து அழைப்பிதழில், தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், துணிவு படத்தில் ஆளுநரை தாக்கிப் பேசுவது மாதிரி அவரை எச்சரிக்கை விடுப்பது மாதிரி டயலாக் ஒன்று இடம் பெற்று உள்ளது . துணிவு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரை பார்த்து பேசும்போது, ’’ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலையை இங்கே காட்டாதீங்க’’ என்று எச்சரிக்கிறார். இது ஆளுநர் ரவியை பார்த்து திமுக சொல்வதாகவே ரசிகர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையா உ.பிஸ் ?#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் pic.twitter.com/QaisN0f3aS
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) January 12, 2023
இந்த வசனம் இப்ப நடக்கும் அரசியலுக்கு ஒத்துப் போகுது. உண்மையைச் சொல்லுங்கள் அமைச்சர் உதயநிதியே.. ரவீந்தர் -தமிழ்நாடு உங்க செய்கை தானே என்று நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்று வாரிசு படத்தில் விஜய் பேசும் அரசியல் பஞ்ச் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வசனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், ‘’உண்மையா உபிஸ்?’’ என்று கேட்கிறார்.
வலைத்தளங்களில் #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் -இந்த டயலாக் பரவி வருவதால், இதனால்தான் இந்த டயலாக் படத்தில் இடம்பெற்றுள்ளதால் தான் வாரிசு படத்திற்கு ஆரம்பத்தில் அதிக திரையரங்குகளை ஒதுக்க உதயநிதி ஸ்டாலின் மறுத்தாரா என்றும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அதே நேரம், அஞ்சு நிமிடத்தில் ஆட்சியை மாறும் என்று சொல்லி என் சொல்லியே முடிச்சிடாதீங்கப்பா என்று நடிகர் விஜய் கதறுவது போல், அவர் ஒரு படத்தில் நடித்த கதறும் காட்சியுடன் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் ன்னு சொல்லி என் சோலிய முடிச்சுடாதீங்கப்பா...😆😆😆@Pachakili20 @Simbu0512 @Karruuppu pic.twitter.com/fkeM0m0UrE
— Պᾰ❡ṳᖱḙṧℏ📿 (@V_V_RAMA) January 12, 2023