நாங்கதான்! எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம்! மாயத்தேவர் அதிரடி

 
ம்

இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான்! எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் மாயத்தேவர்.

பொதுக்குழு களேபரத்திற்கு பின்னர் அதிமுகவின் போஸ்டர்களில் ஓபிஎஸ் போட்டோவை தவிர்த்து வருகின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.   விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஓபிஎஸ் போட்டோவை கிழித்துவிட்டு எடப்பாடி போட்டோவை மட்டும் வைத்துள்ளனர் சிவி சண்முகம் ஆதரவாளர்கள்.  இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும் அதிமுக கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தந்த வருமான,  அதிமுகவிற்கு தேர்தலில் முதல் வெற்றியை தேடித்தந்தவருமான மாயத்தேவர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி இருக்கிறார்.

னா

 அதில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் இடம்பெறவில்லை .  அந்த போஸ்டரில் இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான் என்று தெரிவித்திருக்கிறார் மாயத்தேவர்.   மேலும் நாங்கதான்... எவனுக்கும் விட்டுத்தர மாட்டோம் ..எவனுக்கும் அஞ்சமாட்டோம் என்றும் சொல்லியிருக்கிறார்.   இது  எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டில் அதிமுகவை தொடங்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார்.   அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார் .   அதனால் அன்று முதல் அதிமுகவின் சின்னம் ஆகிவிட்டது இரட்டை இலைச் சின்னம்.   அதன் பின்னரும் மாயத்தேவர் மூன்று முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

மா

 இந்த இரட்டை இலை சின்னம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் ஆதரவு என்பது தொண்டர்களின் நம்பிக்கை.   அந்த வகையில் ஓபிஎஸ் ஐ அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி விட்டால்  சின்னம் முடக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.   தற்போது அது உறுதியாகிறது.   அதிமுகவின் சின்னத்தை பெற்றுத்தந்த  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த மாயத்தேவர் இரட்டை இலை சின்னத்தை யாரும் கைப்பற்ற முடியாது என்கிறார்.   அவர் வெளியிட்டிருக்கும் போஸ்டரில் ஓ. பன்னீர்செல்வம் படம் மட்டும் உள்ளது.   எடப்பாடி பழனிச்சாமியின் படம் இல்லை.   ’’நாங்க தான் எவனுக்கும் விட்டுத்தர தரமாட்டடோம் என்று அவர் சொல்லியிருப்பது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.