அண்ணாமலை எடுத்த முடிவு! கடும் அதிருப்தியில் சீனியர்கள்

 
a

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்தது முதல் கட்சியின் சீனியர்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள் என்று சலசலப்பு பாஜகவில் இருந்து வருகிறது.  தமிழக பாஜக என்றால் அது அண்ணாமலை தான் என்பது மாதிரியான ஒரு பிம்பமும் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.  

எந்த பிரச்சனை என்றாலும் அண்ணாமலை தான் குரல் கொடுத்து வருகிறார்.  தமிழக பாஜகவில் அண்ணாமலை தான் இப்போது முன்னிலையில் இருக்கிறார்.  எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார். சீனியர்கள் பலரும் ஒதுங்கி இருக்கிறார்கள் . தங்களுக்கு எதிலும் முக்கியத்துவம் இல்லை என்பதால் டெல்லி தலைமையிடமும் இதுகுறித்து புலம்பி பார்த்து விட்டதால் தலைமையும் அது குறித்து எதுவும் கண்டுக்காததால் சீனியர்கள் ஒதுங்கியே இருக்கிறார்கள்.

h

 தமிழக அரசியலில் அண்ணாமலை புலிப்பாச்சலில் சென்று கொண்டிருப்பதால் அதை டெல்லி தலைமை விரும்புகிறது.  இதனால் அவரின் சொல்லைத்தான் டெல்லி தலைமை கேட்கிறது.  இதனால் சீனியர்களின் புலம்பல்களை எடுத்துக் கொள்வதில்லை என்கிறது கட்சி வட்டாரம்.  

 அண்மையில் நடந்த கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும் கூட புதியவர்களாக அதுவும் தனக்கு வேண்டியவர்களாக பார்த்து நியமனம் செய்திருக்கிறார் அண்ணாமலை என்ற குமுறல்கள் எழுந்திருக்கின்றன.    அந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சீனியர்கள் யாருக்கும் சீட்டு கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அண்ணாமலை.

p

அண்ணாமலையின் இந்த முடிவுக்கு டெல்லி தலைமையும் சரி என்று தலையாட்டி இருக்கிறதாம்.   இதனால் பொன். ராதாகிருஷ்ணன்,  எச். ராஜா,  சி. பி. ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளார்களாம்.   இது மட்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாகிவிட்டால் தமிழக பாஜகவில் கருத்து மோதல்கள் உச்சத்திற்கு வரும் என்ற நிலை இருக்கிறது.