அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படம் வைப்பு

 
ops

அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஓ.பி.எஸ் படத்துடன் பேனர் வைக்கப்பட்டது.

சென்னை ராயப்பட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பின் பெயரில் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது காலிவதியாகிவிட்டதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ள நிலையில், கூட்டத்திற்கான அறிவிப்பே பெரும் சர்ச்சையானது. அதோடு, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு காலை 10 மணிக்கு கட்சியின் தலைமை நிர்வாகிகள் வருவதற்கு முன்பே ஏராளமான தொண்டர் கட்சி அலுவலத்தில் திரண்டனர். அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.சண்முகத்தில் ஆதரவாளர்கள் அதிகளவில் வந்து இருந்தனர். 
கட்சி அலுவலகம் வந்த தொண்டர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து  எடப்பாடியார் வாழ்க, பொதுச்செயலாளர், நிரந்த பொதுச்செயலாளர எடப்பாடியார் என்று கோஷம் எழுப்பி வந்தனர். திடீரென தொண்டர் ஒருவர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழிந்தார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் ஓபிஎஸ் ஒழிக, எடப்பாடி வாழ்க என்று கோஷம் எழுப்பியதால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து புதிய பேனர் உடனடியாக வைக்கப்படும் என்றும், கிழித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி அலுவலக மேலாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட பேனர் சீரமைக்கப்பட்டு,  ஓ.பி.எஸ் படத்துடன் மீண்டும் பேனர் வைக்கப்பட்டது