அந்த தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம் - தீர்ப்பு குறித்து சி.வி.சண்முகம் விளக்கம்

 
c

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளை அமர்வில் வாங்கிய தடையை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.   இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எடப்பாடி ஆதரவாளரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம் விளக்கம் அளித்திருக்கிறார்.  அவர்,   ‘’ உட்கட்சி விவகாரத்தில் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்பது எல்லாம் அந்த கட்சி சம்பந்தப்பட்ட விவகாரம் தவிர,  இதில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? இதை பேசுங்கள் அதை பேசக்கூடாது என்று எப்படி நீதிமன்றம் சொல்ல முடியும்?   அப்படி சொல்லப்பட்ட தீர்ப்பு என்பது தவறு அதன் மீது எடுக்கப்பட்டிருக்கும் அவமதிப்பு வழக்கு என்பது அதைவிட தவறு.  அதனால் நாங்கள் அந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்லி இருக்கிறது உச்சநீதிமன்றம்’’என்கிறார்.

sc

 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேலும்,   ’’ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு நாங்கள் எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை .  சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறலாம் . அதன் மீது ஏதாவது நிவாரணம் வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள் என்று சொல்கிறது உச்சநீதிமன்றம் .  தனி நீதிபதி எந்த உத்தரவும் அளிக்கவில்லை.   ஜூன் மாதம் பொது குழு நடைபெறலாமா வேண்டாமா என்கிற வழக்கில் தனி நீதிபதி கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் எப்படி தலையிட முடியும்?  யூகத்தின் அடிப்படையில் எப்படி தீர்ப்பு வழங்கப்படும் என்ற கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார். ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை.  தீர்ப்பை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.   தீர்ப்பு வழங்காத பட்சத்தில் எப்படி ஒரு அமர்வு தீர்ப்பை வழங்கலாம்?’’என்று கேட்கிறார்.

 ’’உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? எதைக் கொண்டு வர வேண்டும் எந்த சட்டத்தை ஏற்ற வேண்டும் எந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது அந்தப் கட்சியின் விவகாரம்.  இதில் சந்தேகத்தில் அடிப்படையில் யூகத்தின் அடிப்படையில்  நீதிமன்றம் தலையிட முடியாது.   அப்படி இருக்கும்போது அதன் மீது எடுக்கப்பட்ட அவமதிப்பு வழக்கு ஜூன் 23ஆம் தேதி தீர்ப்பை இந்த உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.  இரண்டு வார காலத்திற்குள் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்’’ என்று தீர்ப்பு குறித்து விளக்கி இருக்கிறார் சிவி சண்முகம்.