எடப்பாடி முகத்தில் கரியைப்பூசிய சபாநாயகர்! ஓபிஎஸ்க்குத்தான் அதிகாரம்!

 
oஎ

அதிமுகவின்  இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவரது ஆதரவாளர்களால் தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருக்கும் ஒரே ஒரு மக்களவை எம்பி  ரவீந்திரநாத்தை அதிமுகவின் எம்பி ஆக கருதக்கூடாது என்று மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார்.  ஆனால் இந்த கடிதத்தை மக்களவை சபாநாயகர் புறக்கணித்திருக்கிறார் என்றும் அதிமுக எம்பி என்று சொல்ல வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் .

ர

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,  அதிமுகவின் ஒரே மக்களவை எம்பி ஆன ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,  அதனால் அவரை அதிமுக எம்பி என்று சொல்லக்கூடாது என்றும் மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார்.  அந்த கடிதம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.  அதே நேரம் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் ஏற்கப்பட்டிருக்கிறது.   அதிமுக எம். பியாக தொடருவார் என்று அறிவிப்பு வந்திருக்கிறது என்கிறார். 

ஒப்

அதுமட்டுமல்லாமல், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளியிடும் பட்டியலே இனி கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பாகும்.  மற்றவர்கள் அறிவிப்பு அதிமுகவை கட்டுப்படுத்தாது என்கிறார்.

எடப்பாடிக்குத்தான் அதிமுகவின் அதிகாரம் இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு தடாலடியாக இறங்கி அடித்து வருகிறது.