நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த பணமோசடியும் நடக்கவில்லை.. சோனியா, ராகுல் ஆதரவாக குரல் கொடுத்த சிவசேனா

 
நேஷனல் ஹெரால்டு வழக்கு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் எந்த பணமோசடியும் நடக்கவில்லை என சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு ஆதரவாக சிவ சேனா குரல் கொடுத்துள்ளது.

நேஷனல்  ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,  மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் ஆதரவாக சிவ சேனா குரல் கொடுத்துள்ளது. சிவ சேனாவின் அரசியல் ஊதுகுழலான சாம்னா பத்திரிகையின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த நாளிதழ் (நேஷனல் ஹெரால்டு) நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டுவதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. 1937ம் ஆண்டு இந்த பத்திரிகையை தொடங்கினார். அப்போது நேரு, மகாத்மா காந்தி மற்றும் சர்தார்  படேல் ஆகியோர் இந்த பத்திரிகையின் முக்கிய தூண்கள். நேஷனல் ஹெரால்டு சுதந்திர போராட்டத்தின் வெளிப்படையான செய்தி தொடர்பாளராக அக்காலத்தில் பிரபலமாக இருந்தது. 

சிவ சேனா

வியாபாரம் இல்லாத ஒரு நிறுவனம் ரூ.50 லட்சத்துக்கு பதிலாக ரூ.2 ஆயிரம் கோடிக்கு உரிமையாளராக மாறியதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டினார். இந்த நிறுவனத்தின் மற்ற இயக்குனர்களில் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் வெளிச்சத்தில் இருந்தனர். இந்த முழு வழக்கில் எங்கும் பணமோசடி நடக்கவில்லை. ஆனாலும் அமலாக்கத்துறை அதற்குள் நுழைந்தது. 

நேரு

நேஷனல் ஹெரால்டு வழக்கில், கடனை திருப்பி செலுத்துவதற்காகவே பரிவர்த்தனை நடந்தது, முறைகேடுக்காக அல்ல. இந்த முழு அத்தியாயத்திலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேரு நினைவிடத்தில் அவரது  பெயரில் சில சம்மன்கள் ஒட்டப்படுமா? அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.விடமிருந்து பண்டிட் நேரு நோட்டீஸ் பெற்ற பிறகே சில ஆன்மாக்கள் அமைதியடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.