ஓபிஎஸ்சை தேடிய பிரதமர்! ஒட்டுமொத்தமாக பாஜகவில் இருந்து விலகிய இபிஎஸ்! புகழேந்தி பரபரப்பு

 
,bbnj

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்கிறது பாஜக என்று பேசி இருந்தார் எடப்பாடி பழனிச்சாமியின் அணியில் இருப்பவரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம்.  இதற்கு தமிழக பாஜகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர் .  குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவில் அடுத்த நிலையில் இருக்கும் சண்முகத்தின்  கருத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி கருத்து தெரிவித்திருக்கிறார் .  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இது குறித்து பேசி இருக்கிறார்.   பாஜகவோடு கூட்டணி முடிந்து விட்டது ஒட்டுமொத்தமாக பாஜகவில் இருந்து விலகி விட்டோம் என்பதைத்தான் சிவி சண்முகத்தின் பேச்சின் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி உணர்த்தி இருக்கிறார்.   ஒட்டுமொத்தமாக அது இபிஎஸின் முடிவு என்பது தெளிவாகிவிட்டது என்று கூறி இருக்கிறார்.

p

 அவர் மேலும் ,  நான்கு வருடங்கள் ஆட்சியில் இருக்கும் போது பாஜகவின் கூட்டணி தேவைப்பட்டது.  இப்போது ஆட்சியில் இல்லை என்றதும் தேவைப்படவில்லை. அன்றைக்கு அதிமுகவில் ஒற்றுமை தேவைப்பட்டது.  இப்போது ஏன் திடீர் கோபம் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார் . 

குஜராத்தில் என்ன நடந்தது என்பதை பாஜக தலைவர் அண்ணாமலை நடுநிலையோடு சொல்ல வேண்டும்.  அங்கு ஓபிஎஸ் எங்கே எங்கே என்று பிரதமர் தேடினார்.  ஏசி சண்முகம் போன்றவர்கள் அதை அறிவார்கள்.   கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் இது தெரியும்.   பின்னர் பன்னீர்செல்வத்தை தேடி கண்டுபிடித்து பதவி ஏற்பு விழாவில் மேடையில் அமர வைத்து அழகு பார்த்தார் பிரதமர் மோடி .

பன்னீர் செல்வத்தை பாஜக மரியாதையோடு நடத்துகிறது.  அன்போடு நடத்துகிறது.  இதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும் . துரோகிகளோடு கூட்டணி இல்லை ஊழல்வாதிகளோடு கூட்டணி இல்லை என்பது தான் பாஜகவின் முடிவு . அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பாஜக கூட்டணி அமைக்காமல் ஓபிஎஸ் அணி உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையே  அறிவுறுத்தி இருக்கிறார்.