தேசிய கட்சியானது ஆம் ஆத்மி! நெகிழும் அரவிந்த் கெஜ்ரிவால்

 
g

ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாகும் தகுதி பெற்றிருக்கிறது.  இதனால் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ந்து பேசியுள்ளார். 

 டெல்லி , பஞ்சாப், கோவா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலத்திலும் தனது தடத்தை பதித்திருக்கிறது.  தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு கட்சி தேசிய அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் தடம் பதித்து தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வாக்கு சதவீதம் பெற்றால் தேசிய  கட்சியாக அங்கீகாரம் வரும். 

க்க்

அதன்படி ஆம் ஆத்மி  கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடந்த தேர்தலில் 6.77% வாக்கை பெற்றிருக்கிறது .  தற்போது குஜராத்தில் நடந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 12 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது.   மேலும் , குஜராத் சட்டமன்றத்தில் ஐந்து தொகுதிகளை வென்றிருக்கிறது.  தேசிய கட்சியாக மாறுகிறது ஆம் ஆத்மி.

 இதுகுறித்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.  அவர் இது குறித்து,   தேசிய கட்சியாக மாறுகிறது ஆம் ஆத்மி.  இதற்கு உழைத்த ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

 அவர் மேலும்,  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்சியாக இருந்தது ஆம் ஆத்மி . பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது தேசிய கட்சி.  இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.  இதற்கு கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கும் குஜராத் மக்களுக்கும் நன்றி.   பாஜகவின் கோட்டையாக இருந்தது குஜராத் மாநிலம்.  அந்த கோட்டைக்குள் நுழைந்து 12 சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறோம்.   எங்கள் மீது நம்பிக்கை வைத்த குஜராத் மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.