நான் ஏன் பா.ஜ.க.வில் இணைந்தேன்?.. தி கிரேட் காளி பளிச் பதில்

 
தி கிரேட் காளி

பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் கவரப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்தேன் என பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி தெரிவித்தார்.

தி கிரேட் காளி என்று அழைக்கப்படும் பிரபல மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா, கடந்த பிப்ரவரி மாதத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். தி கிரேட் காளி பா.ஜ.க.வில் இணைந்தது பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க.வில் இணைந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்,  பா.ஜ.க.வில் ஏன் இணைந்தேன் என்பதற்கான காரணத்தை தி கிரேட் காளி தற்போது தெரிவித்துள்ளார்.

ஜிதேந்திர சிங்

தி கிரேட் காளி நேற்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்தார். அதன் பிறகு தி கிரேட் காளி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குடான சந்திப்புக்கு காரணம், பா.ஜ.க. இணைந்தற்கான காரணம் உள்ளிட்ட கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தி கிரேட் காளி பதிலளிக்கையில் கூறியதாவது: 

மோடி

டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்திக்க வந்தேன். இப்போது, நான் திரும்பி செல்கிறேன். அவர் என்னை போன்ற மலைப் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை சந்திக்க வந்தேன். இது வழக்கமான சந்திப்புதான். பா.ஜ.க.வில் இணைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் கவரப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.