வாங்க வந்து கட்சியில் சேருங்க.. பிரசாந்த் கிஷோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் காங்கிரஸ்

 
பாஜக மட்டும் 100 சீட் வின் பண்ணிட்டா… அமித் ஷாவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணையும் படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நேற்று அந்த கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில், 2024 மக்களவை தேர்தல் குறித்த விரிவான விளக்கத்தை (திட்டம்) பிரசாந்த் கிஷோர் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கட்சியில் சேரும்படி பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர் ஒருவர் கூறியதாவது: பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரலாம். அவர் ஆலோசகராகப் பயன்படுத்தப்பட மாட்டார்.  மாறாக கட்சியில் சேரவும், தலைவராகவும் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தேவைப்படும் செயல் வரைபடம் மற்றும் அமைப்பு மாற்றங்கள் பற்றி அவர் விரிவான விளக்கத்தை அளித்தார்.  370 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களுக்கு கூட்டணி அமைக்க வேண்டும்

கே.சி.வேணுகோபால்

காங்கிரஸில் ஏற்கனவே வலுவாக உள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நிறுவன கட்டமைப்பு குறிப்பாக தகவல் தொடர்பு துறை, முழுமையான மறுசீரமைப்பு தேவை. தகவல் தொடர்பு உத்தி முற்றிலும் மறுவேலை செய்யப்பட வேண்டும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் கூறுகையில், 2024 தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்தார். அதை கட்சியின் ஒரு சிறிய தலைவர்கள் குழு ஆய்வு செய்யலாம். குழுவை வழிநடத்துவது யார் என்பதை காங்கிரஸ் தலைவர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.