நாட்டின் பல தலைவர்கள் என்னை தீவிரவாதி என்று கூறி வருகின்றனர்.. இது என்னை சிரிக்க வைத்தது.. கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல தலைவர்கள் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று கூறி வருகின்றனர் இது என்னை சிரிக்க வைத்தது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள ராஜ்ஜோக்ரியில் உள்ள ராஜ்கியா கன்யா வித்யாலயாவில் 240 அரசு பள்ளிகளில் 12,430 ஸ்மார்ட் வகுப்பறைகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20 ஆயிரம் வகுப்பறைகளை கட்டியுள்ளது.இந்த காலகட்டத்தில் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து 20 ஆயிரம் வகுப்பறைகளை அமைக்க முடியவில்லை. 

ஸ்மார்ட் வகுப்பறை

ஒவ்வொரு மாணவரும் சிறந்த கல்வியை பெற வேண்டும் என்பது பாபா சாஹாப் (டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்) அவர்களின் கனவு. துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவை நனவாக்க முடியவில்லை. அவரது கனவுகள் குறைந்தபட்சம் டெல்லியில் நனவாக தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லியில் பாபா சாகேப் மற்றும் பகத் சிங் கனவுகளை நிறைவேற்றுவோம். டெல்லி பள்ளிகளில் தற்போது ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது, ஏழை குழந்தைகளும் நல்ல கல்வியை பெறுவார்கள். 

அம்பேத்கர், பகத்சிங்

டெல்லியில் சுகாதார அமைப்பை நாங்கள் சரி செய்துள்ளோம். நாடு முன்னேற வேண்டும் என்பதை எங்கள் நோக்கம். எங்களின் நோக்கம் அரசியல் அல்ல, சிறந்த தேசத்தை கட்டியெழுப்புவது. கடந்த சில நாட்களாக, நாட்டின் பல தலைவர்கள் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று கூறி வருகின்றனர். இது என்னை சிரிக்க வைத்தது. தீவிரவாதி என்று அழைக்கும் நபர், இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.