திரௌபதி என்று சொல்வதற்கு பதிலாக நாக்கு தவறி சீதா தேவி என்ற காங்கிரஸ் மூத்த தலைவர்.. பா.ஜ.க. தாக்கு

 
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

திரௌபதி என்று சொல்வதற்கு பதிலாக நாக்கு தவறி சீதா தேவி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

15 மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது.  மொத்தமுள்ள 57 இடங்களுக்கு இன்று (10ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திரௌபதி என்று சொல்வதற்கு பதிலாக நாக்கு தவறி சீதா தேவி என்று கூறிவிட்டார். தற்போது இது  புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

ஹனுமன், சீதாதேவி

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேசியதாவது: கடந்த தேர்தலில் பா.ஜ.க. தேர்தலில் படுதோல்வி அடைந்தது. உண்மை, ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுக்கம் வெல்லும்.  சீதா தேவியை இழிவுப்படுத்தியதுபோல், ஜனநாயகத்தை இழிவுப்படுத்த பா.ஜ.க. விரும்புகிறது.  ஆனால் அவர்கள் (மாநிலங்களவை தேர்தலில்) தோற்று விடுவார்கள். அவர்களின் முகமூடி கீழே விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உண்மையில், திருதராஷ்டிர மன்னர் அரசவையில் பாண்டவர்கள் மற்றும் அந்த சபையில் குழுமியிருந்தவர்களின் முன்னிலையில், துச்சாதனால் ஆடை துகிலுரிந்து அவமானப்படுத்தப்பட்ட திரௌபதியைதான் அவர் குறிப்பிட்டார். ஆனால் நாக்கு தவறி சீதாதேவி என்று குறிப்பிட்டார். ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நாக்கு தவறி திரௌபதி என்று சொல்வதற்கு பதில் சீதா தேவி என்று கூறியதை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. ராமர் இல்லை என்று காங்கிரஸ் மறுத்து வருகிறது என பா.ஜ.க. குற்றம் சாட்டியது.