அந்த செருப்பு பாதுகாப்பாக உள்ளது; உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் பிடிஆர்

 
p

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நேற்று காலையில் நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர்.

j

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு  மரியாதை செலுத்த சென்ற பாஜகவினரை பார்த்து,  இங்கே வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களையெல்லாம் யார் இங்கே உள்ளே விட்டார்கள்? என்று டாக்டர் சரவணன் உட்பட பாஜகவினரை பார்த்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக சொன்னதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.  

கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் செருப்பை வீசினார்.  இந்த சம்பவத்திற்கு திமுகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட  ஆறு பேரை மதுரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.  ஆறு பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு  26 ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

t

 இந்த நிலையில் நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன்,   ’’நேற்றைய  நிகழ்வுகளை பற்றி நான் பின்னர் சொல்கிறேன்’’என்று சொல்லிவிட்டு,    ’’பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்தப் பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் . அவர் மேலும், ’’அந்த செருப்பை எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள்.  அந்த செருப்பை திரும்பப் பெற விரும்பினால் உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று அறிவித்திருக்கிறார்.