முதல்வர் கையில்தான் அந்த முடிவு உள்ளது - செந்தில்குமார் எம்.பி.

 
ம்

 உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்திருக்கிறார் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்.

 தர்மபுரி சேலம் பிரதான சாலையில் அதியமான் கோட்டை அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.   தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

உ

 அப்போது அவரிடம்,   உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று திமுக அமைச்சர்கள் பலரும் கூறி வருவது பற்றி உங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப ,   அமைச்சர் பதவி முதலமைச்சர் பார்வையில் உள்ளது .  ஆனால் என் தனிப்பட்ட  விருப்பம் என்னவென்றால் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்றார்.

அவர் மேலும்,    ஒரு சட்டமன்ற உறுப்பினராக திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அனைத்து வசதிகளும் முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்து வருகிறார்.   ஒரு தொகுதியிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து வேலை செய்து பொதுமக்களுக்கு இத்தனை சேவை செய்து வருகிறார் என்றால்,  அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் அனைத்து தொகுதிகளுக்கும் இதே மாதிரி சேவை செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும்.  இது என் தனிப்பட்ட கருத்து தான்.  மற்றபடி அனைத்து முடிவுகளும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.