அந்த 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியம் - பிரம்மாண்ட தொகை யாருடையது?

 
oஎ

ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் - எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும் இடையேயான வார்த்தை போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.   இந்த நிலையில் ஓபிஎஸ் அனுமதித்தால் 41 ஆயிரம் கோடி தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசி டி பிரபாகர்.

ஜ்ச்

 நேற்று முன்தினம் சென்னை பசுமைவழிச் சாலையில் இருக்கும் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும்,  வேலுமணியும் அவரை சந்தித்தார்கள்.   மீதம் இருக்கும் காலத்தில் பழனிச்சாமி முதல்வராக இருக்கட்டும்.  அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்று ஓபிஎஸ் இடம் சொல்லி சமாதானப்படுத்தினார் தங்கமணி . 

ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் தீர்மானம் கொண்டு வந்த போது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஓபிஎஸ்-க்கு அவர்கள் நன்றியுடன் இருந்ததில்லை.  பல அவமானங்களை ஓபிஎஸ் தாங்கி கொண்டிருந்தார்.  அவரை திட்டமிட்டு கட்சியில் இருந்து வெளியேற்றினார்கள் . ஆனால் விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஒபிஎஸ் நடத்த இருக்கிறார்.  தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளார்கள் . நீதி நியாயம் என்ற அனைத்தும் அவர் பக்கம் உள்ளனர் என்று கூறியிருந்தார் .

திமுகவினருடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக ஓபிஎஸ் தரப்பை  பார்த்து குற்றம் சொல்கிறார்கள் . ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கில் இருந்து சிக்கிவிடாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக  பேரம் பேசிய உண்மைகள் , யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள்?  யார் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார்கள்?  என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதம் தெரிய வரும் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

க்ப்

 மேலும்,  ஓபிஎஸ் அனுமதி அளித்தால் 41 ஆயிரம் கோடி ரூபாய் ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன்.  அப்போது வெட்ட வெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியவரும் என்று சொல்லி மேலும் பரபரப்பை கூட்டினார்.

இந்நிலையில்,   ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுகவின் ஓ.பி.எஸ் தரப்பினரான ஜேசிடி பிரபாகரன், எடப்பாடி பழனிச்சாமியை எச்சரிக்கும் பேச்சு ஊடகங்களில் வந்துள்ளது. அவ்வளவு பிரம்மாண்டமான தொகை யாருடையது? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.  அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? மேலும், அந்த தொகைக்கு வருமான வரி செலுத்தப்பட்டதா?  அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.