திமுகவிலிருந்து விலகிவிட்டேனா? தங்க தமிழ்ச்செல்வன் பதில்

 
தங்க தமிழ்ச்செல்வன்

திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சித் தலைவர் முரளீதரனிடம் கோரிக்கை மனு அளித்தார். அவருடன் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார் உட்பட பூதிப்புரம் கிராம திமுகவினர் பலர் வருகை தந்தனர்.

திமுக-வின் கொ.ப.செ ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்! | Thanga Tamilselvan Given  Inportant Post In Dmk - NDTV Tamil

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “தேனியில் இருந்து போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரம் கிராமம் வழியாக செல்லும் சாலை நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது, இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையே  முழுமையாக எடுத்துக் கொண்டு  சீர் செய்து தர வேண்டும்.‌ மேலும் ஆதிபட்டி கிராமம் வழியாக செல்லும் புதிய புறவழிச்சாலையில் பூதிப்புரம் கிராம மக்கள் பயணிக்க வேண்டும் என்றால் பல கிமீ தொலைவு உள்ளது. எனவே பூதிப்புரம் கிராம மக்களுக்கு ஏதுவாக புறவழிச்சாலை இணைக்கும் விதமாக இணைப்புச் சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.

என்னைப்  பற்றி சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்கள் அதிகப்படியான பார்வையாளரை பெறுகின்றது. இதில் சிலர் நான் ராஜ்யசபா எம்.பி.யாகப் போகிறேன் எனக் கூறி வந்தனர். தற்போது நான் திமுகவிலிருந்து விலகிவிட்டதாக அவதூறு செய்தி ஒன்றையும் பரப்பி உள்ளார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவில் அளித்துள்ள புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், தேனி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றப்படும் என்ற யூகத்திற்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. தேனியைப்  பொருத்தவரை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளோம், எங்களுக்குள் எந்தவித பிரச்சனையும் இல்லை” எனத் தெரிவித்தார்.