சமரச பேச்சு நடத்தும் தம்பிதுரை- செங்கோட்டையன்

 
செ

கடந்த காலங்களில் எடப்பாடிக்கும்  பன்னீர்செல்வத்திற்கும் கருத்து மோதல் ஏற்பட்ட போதெல்லாம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் தான்.   இந்த முறை இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் தம்பிதுரையும் , செங்கோட்டையனும் ஈடுபட்டுள்ளார்கள்.

 ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடிபழனிசாமி தான் முதலில் பேசினாலும் அவர் அதுபற்றி பொதுவெளியில் எதுவும் பேசாமல் அதற்கான வேலைகளில் தீவிரமாக இருந்து காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.   எடப்பாடி பழனிச்சாமியின் இந்த காய் நகர்த்தல் மூவ்களை கண்டு ஆத்திரம் கொண்ட பன்னீர்செல்வம் பொதுவெளியில் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்தது எதற்காக,  இரட்டை தலைமைக்கு ஒப்புக்கொண்டது என்பது பற்றி  போட்டு உடைத்திருக்கிறார்.  

ட்

 அதிமுக செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தின் படி ஒற்றைத் தலைமை விவகாரத்தை பொதுக்குழுவில் கொண்டுவர அதிகாரம் இல்லை.  அப்படி செய்தால் அது சட்டப்படி செல்லாது என்று பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.  அப்படி இருந்தும் எடப்பாடி தரப்பினர் ஒற்றை தலைமை விவகாரத்தை விடுவதாக இல்லை. 

 பொதுக்குழுவில் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறதோ அவரை ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்துவிடலாம் என்று எடப்பாடி தரப்பு முயற்சிக்கிறது .  அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில்  64 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும்,  11 மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தகவல் கசிந்திருக்கிறது.   ஆனாலும் இதை பன்னீர்செல்வம் தரப்பினர் பொருட்படுத்தவில்லை.   

எட்

 மாவட்ட செயலாளர்களால் இரட்டை தலைமை தேர்ந்தெடுக்கப்படவில்லை.   கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால்தான் இரட்டை தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது . தற்போது நடப்பது போன்ற அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்றுதான் எம்ஜிஆர் அன்றைக்கே அதிமுகவின் சட்ட விதிகளில் தலைமை என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வந்திருக்கிறார் .  அதனால் மாவட்ட செயலாளர்களால் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்ட முடியாது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 அதையும் மீறி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வந்தால் இரட்டை இலை சின்னத்தை முடக்கப்படும் என்று சட்ட விதிகளை மேற்கோள்காட்டி சொல்லிவருகின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.   விவகாரம் பெரிதாகி கொண்டே போய் இருக்கின்ற நிலையில் பொதுக்குழுவை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காக பன்னீர் செல்வத்திற்கும் பழனிச்சாமிக்கும் இடையே மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தம்பிதுரையும் செங்கோட்டையனும்.