தெலங்கானாவை போல் நாட்டையும் தங்க பாரதமாக மாற்ற வேண்டும்.. தெலங்கானா முதல்வர் விருப்பம்

 
கே.சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவை போல் நாட்டையும் தங்க பாரதமாக மாற்ற வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விருப்பம் தெரிவித்தார்.


தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சந்திரசேகர் ராவ் பேசுகையில் கூறியதாவது: வரும் நாட்களில் தேசிய அரசியலில் தெலங்கானா முக்கிய பங்கு வகிக்கும். அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா வளர்ச்சி அடைவதை நான் உறுதி செய்வேன். அதே நேரத்தில் வளர்ச்சியின் அடிப்படையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பேன். 

தெலங்கானா

நாம் தங்க தெலங்கானாவை உருவாக்கினோம். இப்போது தங்க பாரத தேசமாக மாற்றுவதன் மூலம் நாட்டின் நிலைமையை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்காகவும் நாம் போராட வேண்டும், தேசிய அரசியலுக்கு செல்வோமா,டெல்லியில் போராடுவோமா, தெலங்கானாவை எப்படி விருத்தியாக்கினோமோ, அதேபோல் நாட்டையும் வளர்க்க வேண்டும். அமெரிக்காவை விட நாட்டை நாம் சிறப்பாக முன்னேற்ற வேண்டும். 

அமெரிக்கா

அமெரிக்காவிற்கு பதிலாக இந்தியா இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும். நம் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இன்று அமெரிக்கா செல்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வரும் நிலைக்கு இந்தியாவை கொண்டு செல்ல முடியும். வெளிநாடுகளுக்கான இலக்காக உருவெடுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் இளைஞர் சக்தி இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.