தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பைன்சா நகரை மைசா என மறுபெயரிடுவோம்.. பண்டி சஞ்சய் உறுதி

 
வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பைன்சா நகரை மைசா என மறுபெயரிடுவோம் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்தார்.

தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பிரஜாசங்கராம யாத்திரை 5-ன் பொதுக்கூட்டத்துக்கு பெரிய வரவேற்பு அளித்ததற்காக மக்களுக்கு நன்றி. பா.ஜ.க. பைன்சாவை தத்தெடுத்து அதை மேம்படுத்துமு்.  பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கலவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும். பழங்கால நூல்களின்படி பைன்சா நகரின் பெயரை மைசா (மஹிசா) என மறுபெயரிடுவோம். 

பைன்சா நகரம்

பைன்சா பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருக்கிறதா? நாம் ஏன் நிறுத்தப்பட்டோம்? நமக்கு விசா தேவையா? மதவெறியை தூண்டும் எம்.ஐ.எம். தலைவர்கள் எங்கும் செல்கின்றனர். இந்து கடவுள்களை அவமதிக்கும் முனாவர் பாரூக்கி நிகழ்ச்சிகளை நடத்துவார். ஆனால் இந்து தர்மத்தின் பாதுகாவலர்களுக்கு அனுமதி இல்லை. இது தெலங்கானா மாநிலத்தின் சோகமான நிலை. 

பா.ஜ.க.

தெலங்கானாவில் நரேந்திர மோடியின் தலைமையில்  பா.ஜ.க.வின் இரட்டை இயந்திரம் கொண்ட அரசு ஆட்சிக்கு வந்ததும், அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்குவோம். வீடுகள் வாங்க முடியாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். பயிர்கள் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பதிவு செய்துள்ளார். தெலங்கானாவில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு சவால் விடும் வகையில் பா.ஜ.க. அங்கு அசுர வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.