கே.சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி தொடக்கம்.. பன்றிக்கு லிப்ஸ்டிக் போடுவது போன்றது.. தெலங்கானா பா.ஜ.க. தலைவர் கிண்டல்

 
கே.சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி தொடக்கம்

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் கட்சியின் பெயரை மாற்றி தேசிய கட்சி தொடங்கியிருப்பதை, பன்றிக்கு உதட்டுசாயம் போடுவது என்று தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் கிண்டல் செய்தார்.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கே.டி.ராம ராவ்

இதனால் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு புதிய பெயர் வைத்தார். தெலங்கான ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என மாற்றினார். இது தொடர்பான பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி தொடங்கியதை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது.

வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பாண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தேசிய கட்சி தொடங்கியிருப்பது குறித்து, தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பாண்டி சஞ்சய் குமார் டிவிட்டரில், டி.ஆர்.எஸ்.,  பி.ஆர்.எஸ். ஸாக மாறியிருப்பது பன்றிக்கு உதட்டுச்சாயம் போடுவது போன்றது. டிவிட்டர் தில்லு (கே.டி.ராமராவ்) ஆட்டத்தை மாற்றுபவர்கள் என்று கூறுகிறார். ஆனால் தந்தை பெயர் மாற்றியவர் ஆனார். மக்கள் இறுதி விதியை மாற்றுபவர்கள் என பதிவு செய்துள்ளார்.