2014ல் மோடியின் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று பா.ஜ.க. கேளுங்கள்.. தேஜஸ்வி யாதவ்

 
தேஜஸ்வி யாதவ்

2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று பா.ஜ.க.விடம் கேளுங்கள் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி கட்சிகளின் அரசாங்கம் நடைபெறுகிறது. 2020 பீகார் சட்டப்பேரவை தேர்தலின்போது, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது. தற்போது, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் பங்குகொண்டுள்ளது மற்றும் அந்த கட்சியின்  தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். இதனால், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு எப்போது வேலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அம்மாநில மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

இந்நிலையில், தேஜஸ்வி யாதவிடம் செய்தியாளர்கள் 10 லட்சம் பேருக்கு வேலை என்ற வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தேஜஸ்வி யாதவ்  கூறியதாவது: இந்து-முஸ்லிம் விஷயங்களுக்கு பதிலாக எங்களிடம் வேலை வாய்ப்பு பற்றி கேட்பது வெற்றிதான். உறங்கி கொண்டிருந்த மக்களுக்கும், வேலைகளை பற்றி கேட்காத மக்களுக்கும், ஊடகங்களும் இப்போது விழித்திருப்பதற்கு நன்றி. இது வெற்றியல்லவா?. பா.ஜ.க. தனது வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம். 

பா.ஜ.க.

மேலும் நீங்கள் 10 லட்சம் வேலைவாய்ப்பு எப்போது தருவீர்கள் என்று நீங்கள் மறைமுகமாக கேட்கும் இந்த கேள்விகள், இது பற்றி முதல்வர் இன்று உங்கள் முன் பேசவில்லையா? ஆனால், 2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று அவர்களிடம் (பா.ஜ.க.) கேளுங்கள். அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பீகாரில் ஆட்சியில் இருந்தனர், அவர்கள் வாக்குறுதியளித்த 19 லட்சம் வேலைகளில் 19ஐயாவது பா.ஜ.க. கொடுத்ததா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.