எதிர்வரும் மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் சிவசேனாவுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்?

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்வரும் மும்பை மாநகராட்சி தேர்தலில், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனாவுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிர்சசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்..

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனாவின் இளம் தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே நேற்று முன்தினம் பீகார் சென்றார். பீகார் பயணத்தின்போது பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை ஆதித்யா தாக்கரே சந்தித்து பேசினார். இதற்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. 

ஆதித்யா தாக்கரே

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்வரும் மும்பை மாநகராட்சி தேர்தலில், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனாவுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிர்சசாரம் செய்வார் என்று பேச்சு எழுந்துள்ளது. தற்போது மும்பை மாநகராட்சியின் அதிகாரம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவு வசம் உள்ளது. சிவ சேனா பிளவுப்பட்டுள்ளதால், மும்பை மாநகராட்சியில் அதிகாரத்தை தக்கவைப்பதில் உத்தவ் சேனா பிரிவுக்கு பல தடைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

தேஜஸ்வி யாதவ்

மும்பை மாநகராட்சியில் உத்தர பிரதேசம், பீகாரை சேர்ந்தவர்கள் சுமார் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். மும்பையில் இந்த மாநிலங்களை சேர்ந்தவர்களின் வாக்கு கணிசமான அளவில் உள்ளது. இதனால் மும்பையில் வசிக்கும் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரை மக்கள் மாநகராட்சி தேர்தலில் முக்கிய பங்கினை வகிக்க முடியும். இதனை கருத்தில் மும்பை மாநகராட்சி தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவை பிரச்சாரம் செய்யவைத்தால் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என உத்தவ் சிவ சேனா பிரிவு கணக்கு போடுகிறது. இதற்காகத்தான் ஆதித்யா தாக்கரே பாட்னா சென்று தேஜஸ்வி யாதவை சந்தித்ததாக கூறப்படுகிறது.