தமிழக அரசியல் பரபரப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டது முதல் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் அவருக்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து திமுகவினரும் கூட்டணி கட்சியனரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி .ஆர். பாலு. இதற்காக ஒத்த கருத்துடைய எம்பிக்கள் அனைவரும் இந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
சென்னை அறிவாலயத்திற்கு வந்து அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று அந்த அழைப்பு விடுத்திருக்கிறார். இதை அடுத்து திமுக எம்பி களும் திமுக கூட்டணி கட்சிகள் எம்பி களும் இந்த கடிதத்தில் கையெழுத்திட உள்ளனர் .
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரண்டு நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். இன்று காலையில் 10:30 மணிக்கு அவர் டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்க இருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த டெல்லி பயணம் மிக முக்கிய வாய்ந்ததாக கருதப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.