திமுகவை விமர்சிப்பதால் பழி வாங்குகிறார்கள்- மனைவியுடன் சூர்யா சிவா புகார்

 
su

ஆளுங்கட்சி திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திட்டமிட்டு வழக்கு போட்டு பழி வாங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள் சூர்யா சிவா.  அவரது மனைவியும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி.   இவருக்கு திருச்சி சண்முகா நகரில் ஏபிசி மண்டேஸ்வரி பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இந்த வளாகத்தை கடந்து ஒரு வருடமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்து,  ஆறு மாதமாக வாடகை தராமல் இருந்து வருகிறார் சூர்யாசிவா.  இதைக் கேட்டால் சூர்யா சிவாவும் அவரது மனைவியும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று கடந்த இரண்டாம் தேதி அன்று பாஜகவின் ஓபிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா  மீது கடந்த 2ஆம் தேதி திருச்சி  ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

s

 இந்த புகாரின் பேரில் இன்று சூர்யா சிவா அவரது மனைவி அத்தினாவுடன் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தார் .அப்போது செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவாவும் அவரது மனைவி அத்தினாவும்,   போலீசாருக்கு என் மீது எப்படியாவது வழக்கு போட வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார்கள் .   யார் புகார் கொடுத்தாலும் உடனே அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது போல் என் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு வருகிறது. 

  இதற்கு எல்லாம் காரணமே திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் தான்.  என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது.  இந்த பள்ளி வளாக கட்டிடம் தொடர்பான புகாரும் கூட இதேபோன்றுதான் என் மீது போலீசார் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.