எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய கட்சி சிலரின் ஆணவம், பதவிவெறியால் சிக்கி தவிக்கிறது- டிடிவி தினகரன்

 
ttv

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய கட்சி ஒரு சிலரின் ஆணவம்,  பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu Polls | TTV Dhinakaran is caught between a rock and a hard place

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அண்ணாவின் 114 வது பிறந்தநாளை  முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். அதிமுகவில் நடக்கும்  கூத்தை பற்றி பதில்சொல்ல வேண்டியதில்லை. அது  நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என கூறினார். எம்ஜிஆர், ஜெ  கட்டிகாத்த இயக்கம். ஒரு சிலரின் ஆணவத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கிக்கொண்டிருக்கிறது.இதற்கு காலம் பதில் சொல்லும். எல்லாம் சரியாகிவிடும். எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால்  ஏற்று கொள்ள மாட்டார்கள். கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டியை  குறைக்க வேண்டும். 

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம் ,முறைகேடுகளை  அனுமதிக்க மட்டோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது. நீட் தேர்வு ரத்து ,ஆயிரம் ரூபாய், சொத்து வரி குறைப்பு  என பல வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றா வேண்டும். எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும், அண்ணா , பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என தெரிவித்தார்.