ராகுல் காந்தியை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா.. அது அவரது சொந்த விருப்பம், அதை கட்சி ஆதரிக்கவில்லை.. திரிணாமுல் காங்கிரஸ்

 
பிரியங்கா காந்திக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களை நினைத்தாலே பயமாக்கு இருக்கு….. சத்ருகன் சின்ஹா

ராகுல் காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா புகழ்ந்து  பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம், ஆனால் அதனை கட்சி ஆதரிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. சத்ருகன் சின்ஹா கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசி இருந்தார். சத்ருகன் சின்ஹா பேட்டி ஒன்றில், ராகுல் காந்தி இளைஞர்களின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். முன்பை போலல்லாமல் இப்போது அவருடைய இமேஜ் முற்றிலும் மாறி விட்டது. சிலர் ராகுல் காந்தியின் இமேஜை அழிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டின் தீவிர தலைவராக உருவெடுத்துள்ளார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்திக்கு பிரதமராகும் திறன் உள்ளது. அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக நாட்டுக்கு சேவை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர் என தெரிவித்தார். இந்நிலையில், சத்ருகன் சின்ஹா கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸின் சாந்தனு சென் கூறியதாவது:

திரிணாமுல் காங்கிரஸ்

காங்கிரஸ் முதலில் தனது கட்சியை ஒருங்கிணைத்து, சிதைவடையாமல் காப்பாற்ற வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் தங்கள் சொந்த கோட்டைகளில் போராடி  வெற்றி பெற வேண்டும், அதன் பிறகு பிரதமர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெளிவுப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.