இடைத்தேர்தல் தோல்வி.. பா.ஜ.க.வின் கர்வத்துக்கும், வங்காளிகளை அவர்கள் இழிவுப்படுத்தியதற்கும் கிடைத்த அடி.. பாபுல்

 
பா.ஜ.க.

மேற்கு வங்க இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்திருப்பது, அந்த கட்சியின் கர்வத்துக்கும், வங்காளிகளை அவர்கள் (பா.ஜ.க.)  இழிவுப்படுத்தியதற்கும் கிடைத்த அடி என திரிணாமுல் காங்கிரஸின் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அசன்சோல் மக்களவை தொகுதி மற்றும் கொல்கத்தாவில் உள்ள பாலிகங்கே சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அசன்சோல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்தார். பாலிகங்கே சட்டப்பேரவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சுப்ரியோவும் வெற்றி பெற்றார்.

யஷ்வந்த் சின்ஹா

இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார பெற்றி இருப்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடியை திரிணாமுல் காங்கிரஸின் யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது: அனைத்து இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தள்ளது.பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தால் பிரதமர் மோடிக்கு பெயர் சென்றிருக்கும். ஆனால் இன்று தோல்விக்கு யார் பெயர் வாங்குவார்கள். இன்றைய தேர்தல் முடிவுகளில் கவனிக்க வேண்டிய விஷயம், அனைத்து இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியடைந்தது, அதுவும் பெரிய வாக்கு வித்தியாசத்தில். 

பாபுல் சுப்ரியோ

வெற்றி பெற்றிருந்தால் அது மோடியின் தனிப்பட்ட வெற்றியாக இருந்திருக்கும். அதனால் இன்று யாருக்கு இழப்பு?. இவ்வாறு அவர் தெரிவித்தார். பாபுல் சுப்ரியோ கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை, பிரச்சாரத்தின் போது அவர்கள் தாழ்ந்தனர். சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருடன் இணைந்து செயல்படுவோம். பா.ஜ.க.வின் கர்வத்துக்காகவும், வங்காளிகளை அவர்கள் இழிவுப்படுத்தும் விதத்திற்காகவும் இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்கு கிடைத்த அடியாகும் என தெரிவித்தார்.