நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாக இருக்கு.. மம்தா கட்சி குற்றச்சாட்டு

 
தேசிய சின்னத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள்  உறுமல், தேவையில்லாமல் ஆக்ரோஷம் மற்றும் பொருத்தமில்லாமல் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றமம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் நீளமுள்ள வெண்கல தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

 ஜவர் சிர்கார்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்திருக்கக்கூடாது சபாநாயகர் தான் திறந்திருக்க வேண்டும் என அசாதுதீன் ஓவைசி தன் பங்குக்கு ஒரு குற்றச்சாட்டை வைத்தார். தற்போது திரிணாமுல் காங்கிரஸோ, புதிதாக வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் ஆக்ரோஷமாக மற்றும் பொருத்தமில்லாமல் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

 ஜவர் சிர்கார் டிவிட்டரில் போட்ட படம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஜவர் சிர்கார் டிவிட்டரில் நமது தேசிய சின்னமான கம்பீரமான அசோகன் சிங்கங்களுக்கு அவமானம். அசல் இடதுபுறத்தில் உள்ளது, அழகானது, நம்பிக்கையுடன் உள்ளது. வலது புறத்தில் இருப்பது மோடியின் பதிவு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ளது. உறுமல்,தேவையில்லாமல் ஆக்ரோஷம் மற்றும் பொருத்தமில்லாதது. அவமானம், உடனே மாற்றுங்கள் என பதிவு செய்துள்ளார்.