பொருளாதார ரீதியாக மேற்கு வங்க அரசு திவாலானது, மம்தா அரசு டிசம்பர் வரையே நீடிக்கும்.. சுவேந்து ஆதிகாரி

 
சுவேந்து ஆதிகாரி

பொருளாதார ரீதியாக மேற்கு வங்க அரசு திவாலானது என்றும் மம்தா அரசு டிசம்பர் வரையே நீடிக்கும் என்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சராக  பார்த்தா சட்டர்ஜி அண்மையில் ஆசிரியர் நியமன ஊழலில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி, பார்த்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும், தனது அமைச்சரவையை  மாற்றி அமைத்தார். இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு வரும் டிசம்பர் வரை மட்டுமே நீடிக்கும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுவேந்து ஆதிகாரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்தா சட்டர்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான சுவேந்து ஆதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஊழல் இருக்கிறது. பொருளாதார ரீதியாக மாநில அரசு திவாலானது  மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. வரம்பு மீறிய சொத்துக்கள் மீளப்பெறுவதையும் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வருவதையும் பார்க்கும்போது மாநில அரசு (மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு) டிசம்பர் வரை நீடிக்கும். பா.ஜ.க. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும். 

மம்தா பானர்ஜி, லியாண்டர் பயஸ்

திரிணாமுல் காங்கிரஸில் இரண்டு குழுக்கள் உள்ளன. அதில் ஒன்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானது.மற்றொன்று இல்லாதவர்கள் பிரிவை சேர்ந்தது. முழு திரிணாமுல் காங்கிரஸூம் ஊழல்வாதிகள், கட்சியில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இரண்டு குழுக்கள் உள்ளன. கட்சியை கட்டியெழுப்பிய இல்லாதவர்களுக்காக நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்களும், உள் சங்கிலியின் ஒரு பகுதி ஊழல் நிறைந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.