ஓபிஎஸ் மகன் வைத்த சஸ்பென்ஸ்

 
ra

 சஸ்பென்ஸ் வைத்துவிட்டு டெல்லிக்கு போயிருக்கிறார் ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத் எம்.பி.

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு இழந்த அதிகாரத்தை மீட்டுத்தர பெரிதும் போராடிக் கொண்டிருக்கிறார் அவரது மகன்  ரவீந்திரநாத்.   சென்னையில் இரண்டு இடங்களில் ஐடி விங் அமைத்து அதை முழுமூச்சில் இயக்கிக்  கொண்டிருக்கிறார் அவர் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.  ஓபிஎஸ்க்கு ஆதரவாக தமிழகமெங்கிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் பின்னணியிலும் ரவீந்திரநாத்தின் பங்களிப்பு இருக்கிறது என்கிறார்கள்.

op

 பொதுக்குழுவில் தன்மானமும் தனித் தீர்மானம் கொண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கிய விவகாரத்திலும்  ஓபிஎஸ் டீம் எடுத்த முயற்சியில் ரவீந்திரநாத்தின்  பங்கு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் .  

அதிமுகவில் தந்தை அதிகாரத்தில் இருந்தால்தான் தாங்கள்  அரசியலில் செல்வாக்காக இருக்க முடியும் .  இல்லை என்றால் எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று அவரது இரண்டு மகன்களும் முடிவெடுத்துள்ளனர் என்றும்,  அதிலும் குறிப்பாக ரவீந்திரநாத் பெரிதும் அதை நினைத்துதான்  போராடிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

 ஓபிஎஸ் டெல்லி பயணத்திலும் அவர் கூடவே சென்றிருக்கிறார்.   டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் டீமில் வழக்கறிஞரும் இருப்பதால் நிச்சயம் உச்சநீதிமன்றத்தில்  சட்ட போராட்டத்திற்கான முன்னெடுப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் அல்லது தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம் என்கிறார்கள். 

rrrr

 நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பெரும்பான்மை நிலவரப்படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் என்றே அக்கட்சியினர் சொல்லி வருகின்றனர்.  அடுத்த பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அவர் பொதுச் செயலாளர் ஆவதற்கான நடவடிக்கைகளிளும்  தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எடப்பாடி.  பொதுக்குழுவில் நேற்று நடந்த களேபரங்களை எல்லாம் பார்த்த போது,  கட்சி முழுவதுமாக எடப்பாடி கைக்கு சென்றுவிட்டது என்பதை பன்னீர் செல்வமும் உணர்ந்து விட்டார்.  அதனால்தான் இனி சட்டப் போராட்டத்தைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் .  

டெல்லி செல்வதற்கு முன்பாக ரவீந்திரநாத்திடம்,  அதிமுக விவகாரங்கள் குறித்து டெல்லி தலைமையிடம் விவாதிக்கப்போகிறீர்களா? என்ற கேள்விக்கு,   ’’பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்.   ரவீந்திரநாத் வைத்த இந்த சஸ்பென்ஸ் எடப்பாடி டீமை ரொம்பவே கவனிக்க வைத்திருக்கிறது.