சூரசம்ஹாரம் ஸ்டார்ட் - 2வது கட்ட போர்

 
st

முதல் கட்ட போரில் ஓ. பன்னீர்செல்வத்தை வென்ற எடப்பாடி பழனிச்சாமி தற்போது இரண்டாவது கட்ட போரிலும் பன்னீர் செல்வத்திடம் இருந்து கட்சியை முழுமையாக மீட்க சூரசம்காரத்தை கையில் எடுத்திருக்கிறார் என்று ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றனர்.

 அதிமுகவில் ஒற்றை தலைமையைக் கொண்டு வந்து பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இத்தனை நாளும் எடுத்துவந்த முயற்சியுடன் அந்த முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கிறார்.   இதனால் ஓபிஎஸ் -எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் அவர்கள் பகுதியில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.   குறிப்பாக தென் மண்டலங்களில் பன்னீர் செல்வத்திற்கும்,  கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவாக  போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றனர்.

sta

 சேலம் முழுவதும் முழுவதும் ‘சூரசம்காரம் ஸ்டார்ட்’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.   மாநகராட்சி அதிமுக கொறடா செல்வராஜ், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிச்சாமி மலர் கிரீடம் அணிந்து கழுத்தில் மாலையுடன் கையில் வேல் வைத்திருக்கும் படத்துடன் ஒட்டப்பட்டிருக்கின்றன.

 இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:   ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் பொறுப்பை ஏற்ற எடப்பாடி,  முதல் கட்டப் போரில் பன்னீர்செல்வத்தை வென்றார்.   தற்போது இரண்டாவது கட்டமாக பன்னீர்செல்வத்திடம் இருந்து கட்சியை முழுமையாக மீட்க வேண்டும் என்பதற்காக சூரசம்ஹாரத்தை கையில் எடுத்திருக்கிறார்.   இதை குறிப்பிடும் வகையில்தான் சூரசம்காரம் ஸ்டார்ட் என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறோம்.   இந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் வெற்றி பெற்று விரைவில் பொதுச் செயலாளர் ஆவார் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் உறுதியுடன்.