மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் ரெய்டு நடத்தப்படுகிறது...தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே

 
சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடுத்தா அவங்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும்…. மகாராஷ்டிரா அரசுக்கு சுப்ரியா சூலே வேண்டுகோள்..

மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் ரெய்டு நடத்தப்படுகிறது என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே குற்றம் சாட்டினார்.

பண மோசடி வழக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் அண்மையில் கைது செய்தனர். மேலும் நேற்று டெல்லியில் சத்யேந்தர் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் ரெய்டு நடத்தப்படுகிறது என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா குற்றம் சாட்டினார்.

சத்யேந்தர்  ஜெயின்

மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் தங்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பாக பதில் தாக்கல் செய்ய நீதிமன்றத்திடம் அமலாக்க இயக்குனரகம் அவகாசம் கோரியது. அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். நாளை நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது.

அமலாக்கத்துறை

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், அந்த கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது: எதுவும் செய்யாத எங்களது 2 தலைவர்களும் (நவாப் மாலிக் மற்றும் அனில் தேஷ்முக்) சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேஷ்முக் குடும்பத்தின் மீது 109 முறை ரெய்டு செய்து லிம்கா சாதனை புத்தக்கத்தில் இடம் பிடிக்க வேண்டும். இன்றோ, நாளையோ அவர்களுக்கு நீதிமன்றம் நற்சான்றிதழ் கொடுக்கும். மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் ரெய்டு நடத்தப்படுகிறது.