ஓபிஎஸ் மகன் வழக்கில் தலையிட விரும்பாத உச்சநீதிமன்றம்

 
o

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் குமார்,  தனது தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். தற்போதைய நிலையில் இந்த வழக்கு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சொல்லி இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

su

தேனீ தொகுதியின் வாக்காளர் மிலானி.  இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்திரநாத்குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் இதுகுறித்து தாக்கல் செய்திருந்த மனுவில்,    கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் குமார்,  வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து,  அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு மேலும் பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார்.  அதனால அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

 தேர்தல் வழக்கு தொடர்வதற்கான உரிய வழிமுறைகளை கடைபிடிக்காமல் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத் குமார் மனுவை நிராகரித்தது.  மேலும்,  தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் உத்தரவிட்டது.

h

 உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ரவீந்திரநாத் குமார்.   இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்றைக்கு விசாரணைக்கு வந்தது.   அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள்,   தற்போதைய நிலையில் இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்து ஓபி ரவீந்திரநாத் குமார் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உள்ளனர்.