எடப்பாடிக்கு அதிகரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

 
ep

ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் இபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2442ஆக உயர்ந்துள்ளது. 

Meet Edappadi Palanisamy, Tamil Nadu CM and Sasikala's Loyalist


அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் வரும் 11ம் தேதி சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி யை தேர்வு செய்யப்படவுள்ளார். இதனை சட்டப்படி எதிர்கொள்ள ஓபிஎஸ் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில்,  அதிமுகவில் உள்ள 2665 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில் 2432 பேர் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுக்குழு வில் இபிஎஸ் க்கு ஆதரவாகவும், தீர்மானங்களை நிராகரிப்பதாகவும் கையெழுத்திட்டிருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் 2441ஆக ஆதரவு எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின், பழனிசெட்டிபட்டி பேரூர் கழகத்தை சார்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்கரவர்த்தி இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் இபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2442ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஓபிஎஸ்-க்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு குறைந்துகொண்டே வருகிறது.