ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் எடப்பாடிக்கு ஆதரவு

 
ma

 ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.   தர்மயுத்தம் தொடங்கியது முதல் பன்னீர்செல்வத்திடம் உறுதுணையாக நின்ற அவரின் தீவிர ஆதரவாளர் மாபா,  எடப்பாடி பக்கம் போய் இருப்பது  ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பக்கம்  சாய்ந்து வருகிறார்கள்.

 அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது.  இதில் கட்சியில் 90 சதவிகித ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறது.   மாவட்ட செயலாளர்கள் 75 பேரில் 63 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.  பொதுக்குழு உறுப்பினர்கள் 2,700 பேர் 2300 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் .

po

இத்தனை நாளும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நின்றவர்கள் இப்போது ஒவ்வொருவராக எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்று வரைக்கும் ஓபிஎஸ் பின்னால் நின்ற மாவட்டச் செயலாளர்கள்  நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவும்,  விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரனும்,   திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வி. அலெக்சாண்டரும் இன்றைக்கு எடப்பாடி பக்கம் போய் இருக்கிறார்கள்.

 அதேபோல் தர்மயுத்தம் தொடங்கியது முதல் ஓ. பன்னீர்செல்வத்தின் உடன் இருந்த அவரின் தீவிர ஆதரவாளர்  முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

ஓபிஎஸ்க்கு 12 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக இருந்த நிலையில் தற்போது 9 மா.செக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.   தேனி மாவட்ட செயலாளர் செய்யது கான்,  சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்,   திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்  பலராமன் ,  கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன்,  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் வைத்தியலிங்கம்,  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன்,  அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன்,  தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,  பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஆகிய 9  மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள்.