அடுத்தவன் என்றால் ஆரியமாயை! உதயநிதிக்கு சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தமா? கலாய்க்கும் கஸ்தூரி

 
k

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராகிறார்.   நாளை காலையில் 9:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. 

நாளை 14.12.2022 சுபமுகூர்த்த தினம் ஆகும்.  நாளை காலை 9.15 மணி 10.15 மணி வரையிலும் நல்ல நேரம் ஆகும்.  உதயநிதி அமைச்சராவதை முன்னிட்டு திருவொற்றியூர் கோவிலுக்கு சென்று  சிறப்புபூஜை செய்துவிட்டு வந்துள்ளார் துர்காஸ்டாலின்.

u

திமுக என்றால் ஆன்மீகத்திற்கு எதிரான கொள்கையை கொண்டது, கடவுள் மறுப்பு கொள்கை உடையது என்று  கட்சியின் மூத்த தலைவர்களால் ஒரு பிம்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  அதற்கு தகுந்தார் போல் செந்தில்குமார் எம்பி போன்றவர்கள் அரசு விழாக்களில் நடைபெறும் பூமி  பூஜைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.  ஆனால் முதல் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டில் போகாத கோவில்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்.

 இது குறித்து பலர் விமர்சனம் செய்த போது,  அது தனிப்பட்ட விஷயம் . அரசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் ஏதேனும் நல்ல நாள் நட்சத்திரம் பார்க்கிறார்களா? என்று திமுகவினர் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.   ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உட்பட முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து தான் பதவியேற்பு உட்பட அரசு முக்கிய நிகழுவுகள் ஒவ்வொன்றும் செய்கிறார்கள் என்று எதிர் தரப்பினர் ஆதாரங்களுடன் சொல்லி வருகின்றனர் .

இந்த நிலையில் சுபமுகூர்த்த நாளில் உதயநிதி ஸ்டாலின் நல்ல நேரத்தில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.  இது குறித்து நடிகை கஸ்தூரி,  ‘’14th December 2022. Most auspicious day , 9.30 am excellent auspicious time.அடுத்தவன் என்றால் அது ஆரியமாயை, சனாதனம் மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம் சுபமுகூர்த்தம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு’’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.