கடப்பாவில் திப்பு சுல்தான் சிலை கட்ட அனுமதிக்க மாட்டோம்.... ஜெகன் மோகன் ரெட்டி அரசை எச்சரித்த பா.ஜ.க

 
திப்பு சுல்தான்

ஆந்திர மாநிலம் கடப்பாவில் திப்பு சுல்தான் சிலை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஆந்திர பா.ஜ.க.வின் என இணை பொறுப்பாளர் சுனில் தியோதர் எச்சரித்தார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ரணபேரியில் அம்மாநில பா.ஜ.க.வின் இணை பொறுப்பாளர் சுனில் தியோதர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் தியோகர் கூறியதாவது: குண்டூரில் உள்ள ஒரு டவருக்கு ஜின்னாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அகண்ட பாரதம் (பிரிக்கப்படாத இந்தியா) பிரிவினையின்  போது லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதற்கும், பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதற்கும் அவர் (ஜின்னா) காரணமாக இருந்தார்.

முகமது அலி ஜின்னா

குண்டூரில் உள்ள டவரில் இருந்து முகமது அலி ஜின்னாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. கோருகிறது. ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்ற  அச்சசத்தில் டவரின் பெயரை மாற்ற விரும்பவில்லை. இதை பா.ஜ.க பொறுத்துக் கொள்ளாது. பா.ஜ.க. முஸ்லிம்களுக்கோ அல்லது இஸ்லாமுக்கோ எதிரானது அல்ல. மாறாக, அடிப்படை வாதம்  மற்றும் திருப்திப்படுத்தும்  அரசியலுக்கு எதிரானது.

சுனில் தியோதர்

 டவருக்கு  முன்னாள் குடியரது தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை மாற்றலாம். ஆனால் அவர் (முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி) ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். ஏனெனில் அவருக்கு வாக்குகள் கிடைக்காது. இந்த மாவட்டத்தின் பெயர் கடப்பா. அதாவது சௌகத் (வெங்கடேஸ்வர சுவாமி நுழைவு), கடப்பாவில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளரான திப்பு சுல்தான் சிலை கட்ட பா.ஜ.க. அனுமதிக்காது. அவர் பில்லியன் கணக்கான இநதுக்களை கொன்று பலவந்தமாக இஸ்லாமியராக மாற்றினார். அதே நேரத்தில் அவரது ராணுவம் லட்சக்கணக்கான இந்து பெண்களை கற்பழித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.