இந்து மாநிலத்தில் இந்துத்துவா செயல் திட்டம் வேலை செய்யாததால் பா.ஜ.க.வுக்கு பெரும் அதிர்ச்சி.. இமாச்சல பிரதேச முதல்வர்

 
சுக்விந்தர் சிங் சுகு

இந்து மாநிலத்தில் இந்துத்துவா செயல் திட்டம் வேலை செய்யாததால் பா.ஜ.க.வுக்கு பெரும் அதிர்ச்சி என்று இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு நேற்று மதியம் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

பா.ஜ.க.

இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு சுக்விந்தர் சிங் சுகு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்து மாநிலத்தில் இந்துத்துவா செயல் திட்டம் வேலை செய்யாததால் பா.ஜ.க.வுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். மாநிலத்தில் போதை மருந்துகளை வேரோடு அகற்றுவதே எனது முன்னுரிமை என தெரிவித்தார். 

மோடி

இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி டிவிட்டரில், இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்ற ஸ்ரீ சுக்விந்தர் சிங் சுகு ஜிக்கு வாழ்த்துக்கள். இமாச்சல பிரதேசத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பையும் நான் உறுதியளிக்கிறேன் என பதிவு செய்து உள்ளார்.