பக்ரா பியாஸ் மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் நியமன விதிமுறைகள் மாற்றத்தால் பஞ்சாப் பாலைவனமாகும்... சுக்பீர் சிங்

 
பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின்  முழு நேர தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றியதால் பஞ்சாப் பாலைவனமாக மாறும் என சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் (அணைகளிலிருந்து அளிக்கப்படும் நீர் மற்றும் மின்சாரம்  இவற்றை நெறிப்படுத்தி வரும் அமைப்பு) முழு நேர தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த புதன்கிழமை மாற்றியது. முன்பு இரண்டு முழுநேர உறுப்பினர்களின்  பதவிகள் ( உறு்ப்பினர்- அதிகாரம் மற்றும் உறுப்பினர்- நீர்பாசனம்) முறையே பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தகுதியான வேட்பாளர்களால் அந்தந்த மாநிலஅரசாங்கங்களால் பரிந்துரைக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவிலிருந்து எப்போதும் நிரப்படும்.

மத்திய அரசு

பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின்  முழு நேர தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றியதற்காக மத்திய அரசை சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுக்பீர் சிங் பாதல் இது தொடர்பாக கூறியதாவது: நியமன முறைகளை மாற்றுவது மாநிலத்தின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. 

சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாபியர்களுக்கு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தில் (பி.பி.எம்.பி.) வேலை கிடைப்பதை கடினமாகும். குரு சாஹிபன், துறவிகள் மற்றும் பார்ப்பனர்களின் பசுமையான நிலப்பரப்பில் ஒரு பயங்கரமான நெருக்கடி உருவாகிறது. பஞ்சாப் பாலைவனமாக மாறும். இந்த அச்சுறுத்தலை அகாலி தளம் எதிர்த்து போராடும். மேலும் நமது குழந்தைகள் பட்டினியை எதிர்கொள்வார்கள் அல்லலு வேறு இடங்களில் பிழைப்பு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.