மேற்கு வங்கத்தில் 2024 மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பா.ஜ.க.

 
பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் 2024 மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் மஜூம்தார் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் சுகந்தா மஜூம்தார் உரையாற்றுகையில் கூறியதாவது: பா.ஜ.க. அகிம்சையை நம்புகிறது. அதற்காக தள்ளுமுள்ள ஏற்பட்டால் அது எதிர்வினையாற்றது என்று அர்த்தமல்ல. விளையாட்டு இருக்கும்- விளையாட்டு இரு தரப்பினராலும் விளையாடப்படும், அது ஆபத்தான ஒன்றாக இருக்கும். 

சுகந்தா மஜூம்தார்

மாநிலத்தின் சொத்துக்களை விற்கும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு சில ஆண்டுகளில் அகற்றப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மேற்கு வங்கத்தில் 2024 மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான வழக்குகளில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த சுமார் 300 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர். சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. 

திரிணாமுல் காங்கிரஸ்

வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் பலர் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எவரும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், பிரதமர் மோடி இருக்கும் வரை பிடியில் இருந்து விடுபட முடியாது. காவல்துறையின் நடுநிலைமையை உறுதிப்படுத்தும் வகையில் மக்களவையில் மசோதா கொண்டு வரப்படும். எந்த அரசியல் கட்சியிடம் இருந்தும் அல்ல, வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து உங்களுக்கு (காவல்துறை) சம்பளம் வழங்கப்படுவதால் நீங்கள் (காவல் துறை) நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.