நேரு மற்றும் வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவின் ஒரு பகுதியாக ஒப்புக்கொண்டோம்.. சுப்பிரமணியன் சுவாமி

 
சுப்பிரமணியன் சுவாமி

நேரு மற்றும் வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத், தைவானை சீனாவின் ஒரு பகுதியாக நாம் ஒப்புக்கொண்டோம் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக பேசக் கூடியவர். எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல தான் சேர்ந்த கட்சியையும் சுப்பிரமணியன் சுவாமி அசராமல் விமர்சனம் செய்வார். இதனால் சுப்பிரமணியன் சுவாமி  என்றாலே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பா.ஜ.க.வுக்கும் ஒரு நெருக்கடிதான். தற்போது முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய் மற்றும் தற்போதைய பிரதமர் மோடியை சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

நேரு

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அந்த தீவை தங்கள் நாட்டின் ஒர் அங்கமாக கருதி வருகிறது. தைவானை தனிநாடாக அங்கீகரிப்பதைப்போல், அந்த தீவுக்கு எந்த நாட்டு தலைவர் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் நாடாளுமன்ற கீழவை தலைவர் பெலோசி நேற்று முன்தினம் தைவானுக்கு சென்றார். வழக்கம் போல் சீனா இதற்கும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் தைவான் விவகாரத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் வாஜ்பாய் ஆகியோரை சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

வாஜ்பாய்

பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில், நேரு மற்றும் ஏபிவியின் (அடல் பிஹாரி வாஜ்பாய்) முட்டாள்தனத்தால் திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதி இந்தியர்களாகி நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் இப்போது சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்.ஏ.சி.யை மதிப்பதில்லை மற்றும் லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றியது. யாரும் வரவில்லை என்று மோடி மயக்கத்தில் இருக்கிறார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்று சீனா தெரிந்து கொள்ள வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.