80 சதவீத இந்துக்கள் வாரணாசியில் இறங்க முடிவு செய்தால், இந்த நாடு துண்டு துண்டாகி விடும்.. சுப்பிரமணியன் சுவாமி

 
சுப்பிரமணியன் சுவாமி

80  சதவீத இந்துக்கள் வாரணாசியில் இறங்க முடிவு செய்தால், இந்த நாடு துண்டு துண்டாகி விடும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.


பா.ஜ.க.வின் மாநிங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 1991 வழிபாட்டு தலங்கள் சட்டங்கள் அப்போதைய (காங்கிரஸ்) அரசால்  நிறைவேற்றப்பட்ட சட்டம். இன்றைய அரசால் ஏன் அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை என்று எனக்கு புரியவில்லை. இது தொடர்பாக நான் பிரதமருக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளேன். நீங்கள் அதை திரும்ப பெறுங்கள் என்று ஒரு எளிய தீர்மானத்தை நகர்த்துங்கள், பிறகு நாம் இதை விவாதிப்போம். வழிபாடு சம்பந்தமானது அல்ல, நம்பிக்கை சார்ந்தது என்பதால் இந்த கேள்விக்கு நீதிமன்றங்கள் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  நாடு முழுவதும் ராமர் கோயில்கள் உள்ளன. அனால் அவர் எங்கு பிறந்தார் என்பது நம்பிக்கையின் விஷயம், அதை நீங்கள் மதிக்க வேண்டும். 

ஞானவாபி மசூதி

இடிக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் மீட்டுத் தருமாறு நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் மூன்றை மட்டுமே கேட்கிறோம். அதில் ஒன்று (ராமர் கோயில்) ஏற்கனவே முடிந்து விட்டது. இரண்டு மீதமுள்ளது. ஞானவாபி மசூதியில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்து-முஸ்லிம் சமரசத்திற்கு  மேடை அமைக்கப்பட்டுள்ளது. மசூதியை வேறு இடத்தில் மீண்டும் கட்டுவதும், ஞானி வாபி விஸ்வநாதர் கோயிலை அதன் பழமையான இடமாக மீட்டெடுப்பதும் சிறந்தது. அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் இந்த கோயில் இடிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க எங்களிடம் உறுதியான ஆதாரம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஞானவாபி மசூதி வீடியோ அளவீடு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். மேலும், பாபர் மசூதியை முஸ்லிம்கள் ஏற்கனவே இழந்து விட்டார்கள் ஆனால் இன்னொரு மசூதியை இழக்க மாட்டார்கள் என்று ஓவைசி தெரிவித்தார். ஞானவாபி மசூதி வீடியோ அளவீடு தொடர்பான ஓவைசியின் நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், அரசியல் சட்டம் இருப்பதால் எங்களுக்கு பத்வா கொடுக்க முடியாது என்பதை ஓவைசி அறிந்து கொள்ள வேண்டும். 80  சதவீத இந்துக்கள் வாரணாசியில் இறங்க முடிவு செய்தால், இந்த நாடு துண்டு துண்டாகி விடும் என தெரிவித்தார்.