நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்?

 
n

திமுகவில் இருந்து வெளியேறிய சுப்புலட்சுமி ஜெகதீசன் நாம் தமிழர் கட்சியில் இணைகிறாரா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.   திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார்.   இதன் பின்னர் அவர் அதிமுகவில் இணைய போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.  அதற்கு மறுப்பு தெரிவித்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.   பாஜகவில் அவர் இணையபோவதாகவும் வெளிவந்த தகவலை மறுத்த சுப்புலட்சுமி ஜெகதீசன்,  பாஜகவை விமர்சிக்கவே தான் திமுகவிலிருந்து விலகியதாக அதிரடி காட்டி இருந்தார்.

see

 இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதன் மூலமாகத்தான் அவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்,  நாம் தமிழர் கட்சியில் இணைய போகிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. 

 சீமான் எழுதி இருக்கும் அந்த கடிதத்தில் உங்களை இழந்ததற்கு திமுக தான் வருந்தி திருந்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் உங்களை ‘சுப்பக்கா’ என்று பாசத்தோடு அழைத்த அந்தக் காலகட்டத்தில் உங்களின் அருமை எனக்குப் புரியவில்லை. பாஜகவை விமர்சிக்க திமுகவில் இருப்பது தடையாய் உள்ளது.  அதனால் நான் விலகி சுதந்திரமாக தனித்து நின்று விமர்சிப்பேன் என்ற உங்களது கொள்கை உறுதியை கண்டு வியக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும்,  நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள குறைகளை நீங்கள் திமுக தலைமையின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற காரணத்தாலேயே உங்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்பட்டதாக அறிகிறேன். உங்கள் கருத்தோடு நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். இந்த வேலைத் திட்டத்தால் நம் தமிழினமே பெரும் அழிவைச் சந்திக்கும் நிலையில் உள்ளதை நன்றாக உணர்கிறேன். எனவே எந்தக் காலத்திலும் உங்கள் மகன் உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய மகன் என்பதில் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். உங்களுடைய தன்மான உணர்வுக்கும், தமிழ் உணர்வுக்கும் நான் தலை வணங்குகிறேன் என்று சீமான் எழுதி இருப்பதன் மூலம் சுப்புலட்சுமி ஜெகதீசன் நாம் தமிழர் கட்சியில் இணைப்போகிறாரா?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.