நடிகை ரம்யாவுக்கு எதிராக போராட்டம் - கர்நாடக காங்கிரஸில் வலுக்கும் மோதல்

 
r

நடிகை ரம்யாவுக்கும் கர்நாடக காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நலபட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.   அதில் ரம்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று முகமது நலபட் சொல்ல,  ஜாமீனில் இருப்பவர் என் நேர்மை பற்றி பேசுவதா? என்று கொதித்தெழுந்திருக்கிறார் ரம்யா.  இதனால் கர்நாடக காங்கிரஸில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

r

 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமானவர் ரம்யா.  இவர் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவகுமார் , அமைச்சர் அஸ்வத் நாராயணன் ஆகியோருக்கு இடையிலான மோதல் விவகாரத்தில் அஸ்வத் நாராயணனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.   அஸ்வத் நாராயணனும் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக இருக்கும் எம்பி பட்டியலும் ரகசியமாக சந்தித்து பேசியதாக டி.கே. சிவகுமார் சொல்லியிருந்தார் .  இந்த விவகாரத்தில் அஸ்வத் நாராயணனுக்கு ஆதரவாக ரம்யா கருத்து தெரிவித்திருந்தார் .  

இதனால் டி. கே. சிவக்குமாருக்கும் ரம்யாவுக்கும் இருக்கும் இடையே மோதல் உண்டாகி இருக்கிறது என்று பாஜக சொல்லி வருகிறது.   இந்த நிலையில் மைசூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் முகமது நலபட் செய்தியாளர்களிடம் பேசிய போது,   காங்கிரஸ் கட்சியின் எம் பி ஆக இருந்தபோது ரம்யாவை எனக்கு தெரியும்.   தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறாரா?  எந்த பொறுப்பில் இருக்கிறார்? என்று தெரியவில்லை.  

sa

 ரம்யாவுக்கு டி.கே. சிவகுமாரை தெரியும்,  எம்பி பட்டியலையும் தெரியும்.   அப்படி இருக்கும் போது இரண்டு பேரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம்.   டுவிட்டர் மூலமாக மாநில தலைவர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக பேசியிருப்பது சரி இல்லை.   எங்கள் தலைவரைப் பற்றி பேசிய ரம்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.   காங்கிரஸ் கட்சியின் தொண்டனாகவும் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து சொல்கிறேன் . எங்கள் கட்சித் தலைவரை பற்றி பேசியதால் ரம்யாவுக்கு எதிராக பேச வேண்டியது இருக்கிறது. 

காங்கிரஸ் தலைவர் டிகே. சிவகுமார் பற்றி ரம்யா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.   ரம்யாவுக்கு உடல்நிலை சரியில்லை . அதனால்தான் இப்படி பேசுகிறார்.  அவர் மருத்துவமனை சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார் முகமது நலபட்.  


 இதற்கு ரம்யா டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார் .  இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆன முகமது நலபட் நேர்மையானவர் காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது ஹாரிசின் மகன்.  ஆனால்,  தாக்குதல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருகிறார்.  அவர் எனது நேர்மை பற்றி பேசி இருக்கிறார் என்று  தாக்கி பதிவிட்டு இருக்கிறார்.   இதனால் ரம்யாவுக்கும்  முகமது நலப்பட்டுக்கும் இடையே மோதல் உருவாகி இருக்கிறது.  இது கர்நாடக காங்கிரசில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.