’’உத்தரவுக்காக காத்திருக்கோம் தலைவரே..’’- ஸ்டாலின், நேரு.. அந்த நாள் ஞாபகம்

 
sk

சூழ்நிலைக்கேற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்  என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார்.

st

இதே போல் சூழ்நிலைக்கேற்ப, விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டபோது,  கடந்த ஆட்சியில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டபோது, அறப்போராட்டம் நடத்துவோம் என்று அப்போதைய எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் கொதித்தெழுந்தார்.  அறப்போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் சொன்னதற்கு,  உத்தரவுக்காக காத்திருக்கிறோம் தலைவரே என்று பதிவிட்டிருந்தார் கே.என்.நேரு.

nn

அதுகுறித்து,  ‘’பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் இடியை இறக்கியுள்ளனர். இதயம் என்ற ஒன்று உங்களுக்கு இருக்கிறதா. இதயம் என்று ஒன்று இருந்தால் தானே நீங்கள் கனத்த இதயத்துடன் அறிவித்திருக்க முடியும்.  ஈவு இரக்கமின்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை கைவிடவில்லை என்றால் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஜனநாயக ரீதியில் மாபெரும் அறப்போராட்டம் விரைவில் நடத்தப்படும்’’என்ற அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், இன்றைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவுக்கு கீழே, ’’உத்தரவுக்காக காத்திருக்கோம் தலைவரே..’’ என்று பதில் பதிவு போட்டிருந்த கே.என்.நேருவின் டுவிட்டர் பதிவினையும் எடுத்து, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!வந்ததே!வந்ததே! என்று கமெண்ட் அடித்திருக்கிறார் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி.