காங்கிரஸிடமிருந்து சுதந்திரம் பெற்றது ஆசாத் அல்ல, அவரிடமிருந்து ஆசாதியை பெற்றது காங்கிரஸ்தான்... பி.வி. ஸ்ரீனிவாஸ் தாக்கு

 
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸிடமிருந்து ஆசாதியை (சுதந்திரம்) பெற்றது ஆசாத் அல்ல, அவரிடமிருந்து ஆசாதியை பெற்றது காங்கிரஸ்தான் என்று இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் தாக்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளிக்கிழமையன்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியிலிருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக பி.வி. ஸ்ரீனிவாஸ் கூறியதாவது: காங்கிரஸிடமிருந்து ஆசாதியை (சுதந்திரம்) பெற்றது ஆசாத் அல்ல, அவரிடமிருந்து ஆசாதியை பெற்றது காங்கிரஸ்தான்.  காங்கிரஸ் தலைமை எப்போதுமே அவரை நம்பியது, விரக்தியின் போது அவருக்கு துணையாக நின்றது. ஆனால்  அந்த கட்சிக்கு அவரால் திரும்ப கொடுக்க முடியவில்லை. 

பி.வி. ஸ்ரீனிவாஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜி தனது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கும் நேரத்தில், அவர் பின்வாங்கியது (கட்சியிலிருந்து வெளியேறியது) மிகவும் புண்படுத்தும் பகுதி நேரமாகும். காந்தியின் (காந்தி குடும்பம்) நான்கு தலைமுறைகளின் கீழ் 1980 முதல் 2021வரை தொடர்ந்து அதிகாரரத்தை அனுபவித்து வந்தார். அவர் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை மற்றும் எல்.ஓ.பி.யாக  இருந்தவரை எல்லாம் சரியாகவே இருந்தது. அனால் காங்கிரஸ் தலைமை மீதான அவரது தற்போதைய மோசமான தாக்குதல்கள் பத்ம பூஷண் விருதுக்கு மற்றும் அரசு தங்குமிடத்தை நீட்டிப்பது செய்ததற்கு திருப்பி கைமாறு (பா.ஜ.க.) செலுத்துவது போலவும் தெரிகிறது. 

பா.ஜ.க.

2013ல் ராகுல் காந்தி அவசர சட்டத்தை கிழித்ததால் ஆசாத் மிகவும் புண்பட்டிருந்தால், அப்போது அவர் ஏன் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யவில்லை? 2014ல் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எல்.ஒ.பி.யை ஏற்றுக்கொண்டார்? கொடுங்கோன்மை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக காங்கிரஸ் பெரிய போராட்டத்துக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில், அவரது ராஜினாமா, அவர் கட்சியை பற்றி மட்டுமல்ல மக்கள் பிரச்சினையிலும் அக்கறையற்றவர் என்பதையே காட்டுகிறது.  இது காங்கிரஸூக்கு துரோகம் செய்வதை விட, ஊழல் ஆட்சிக்கு ஒத்துழைப்பது போல் தெரிகிறது. நாங்கள் மீண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.