நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் மகிழ்ச்சி- எஸ்.பி. வேலுமணி

 
sp

ஓ.பி.எஸ் அணி மேல்முறையீடு செய்தால் , சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி , நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் பசுமைவழிசாலையில் உள்ள இ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சிய நத்தம் விஸ்வநாதன்,"சட்டப்படி  வழங்கப்பட்டுள்ள சிறப்பான தீர்ப்பு 
ஓ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் அதையும் எதிர்கொள்வோம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வேலுமணி," ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிபலிப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் , அதன் படி நீதி வென்றுள்ளது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொண்டர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர்.நிச்சயம் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும்" என்றார்.