பா.ஜ.க. எம்.பி. சன்னி தியோல் உள்பட 6 எம்.பி.க்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை..

 
சன்னி தியோல்

பா.ஜ.க.வின் எம்.பி. சன்னி தியோல் உள்பட மொத்தம் 6 எம்.பி.க்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும்  , எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது. நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா

பா.ஜ.க.வின் எம்.பி. சன்னி தியோல் உள்பட மொத்தம் 6 எம்.பி.க்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தர பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களிக்க போவதாக தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

இது தொடர்பாக அகிலேஷ்ய யாதவ் கூறுகையில், நாட்டில், பொருளாதார நிலை குறித்து அவ்வப்போது அரசுக்கு தெரிவிக்கும் ஒருவர் இருக்க வேண்டும். இலங்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் அதை (பொருளாதாரம்) பற்றி பேசக்கூடிய ஒரு குடியரசு தலைவர் நமக்கு இருக்க வேண்டும் என காரணம் தெரிவித்தார்.